Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Jio Platforms - ரூ.3.73 லட்சம் கோடியை தாண்டிய விண்ணப்ப மதிப்பு

Jio Platforms - ரூ.3.73 லட்சம் கோடியை தாண்டிய விண்ணப்ப மதிப்பு

அனைத்துப் பிரிவுகளிலும் ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் முதலாவது பொதுப் பங்கு வெளியீட்டுக்கு இரண்டாவது நாளில் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆங்கர் மற்றும் பொதுமுதலீட்டாளர்களின் விண்ணப்ப மதிப்பு ரூ.3.73 லட்சம் கோடியைத் தாண்டிய நிலையில், அனைத்துப் பிரிவுகளிலும் ஒதுக்கப்பட்ட பங்குகளைவிட அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மொத்தம் ரூ.30,213 கோடி மதிப்பிலான இந்தப் பங்கு வெளியீடு, நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 5.54 மடங்கு சந்தா பெற்றுள்ளது. தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவு 13.29 மடங்கு சந்தாவுடன் முதலிடத்தில் உள்ளது. நிறுவனம்சாரா முதலீட்டாளர்கள் பிரிவில் 5.89 மடங்கு விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.


சில்லறை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 1.53 மடங்கு சந்தா பெற்றுள்ளது. ஊழியர்கள் பிரிவில் 2.09 மடங்கும், பங்குதாரர்கள் பிரிவில் 4 மடங்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால், ஒவ்வொரு முதலீட்டாளர் பிரிவிலும் முழுமையான சந்தா பதிவாகியுள்ளது.


முதல் நாளிலிருந்தே நிறுவன முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டிய நிலையில், இரண்டாவது நாளிலும் வலுவான தேவை தொடர்ந்துள்ளது. குறிப்பாக, நிறுவன முதலீட்டாளர்களும் நிறுவனம்சாரா முதலீட்டாளர்களும் ஒட்டுமொத்த சந்தா உயர்வுக்கு முக்கியப் பங்களித்துள்ளனர்.


பங்கு வெளியீட்டுக்கான விண்ணப்பப் பதிவு இன்று நிறைவடைகிறது. பங்கு ஒதுக்கீடு 26-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 28-ம் தேதி, பங்குச் சந்தைகளில் ஜியோ பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.

முந்தைய செய்தி
eMudhra பங்குகள் 20% வீழ்ச்சி
அடுத்த செய்தி
என்டெக்ஸ், ஃபின்டெக்ஸ் புதிய குறியீடுகள் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்